Posted on 13 Aug, 2024
கொரோனா நேரத்தில் நாம் பல உதவிகள்
கொரோனா நேரத்தில் நாம் பல உதவிகள் செய்து வந்தோம்.இலவசமாக கபசுர குடிநீர் கொரோனா நேரத்தில் நம்மை பாதுகாக்க மிகவும் உதவிய காவல்துறை தூய்மை காவலர்கள் மற்றும் சமூகப் பணியாற்றும் அனைவரிடமும் மாஸ்க் இலவசமாக வழங்கி வந்தோம் வழங்கி வந்துள்ளோம். இதுவரை 50 ஆயிரம் மாஸ்க் வழங்கப்பட்டது. 105 நாட்கள் தொடர்ந்து காலை மற்றும் மதிய உணவு கபசுர குடிநீர் அனைத்தும் மக்களை தேடி குறிப்பாக வயதான மக்கள் எங்கு இருக்கிறார்களோ அவர்களை தேடி அவர்களுக்கு எளிதாக அந்த உணவு கிடைக்கும் வகையில் நாம் தன்னார்வ தொண்டு தொண்டர்களை சேர்த்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி 15 நாட்களும் அவர்களின் பாதுகாப்பு பாதுகாப்பான முறையில் உணவு வழங்கப்பட்டு வந்தது. மருத்துவர்களும் செவிலியர்களும் சென்று வருவதற்கான அவர்களின் பாதுகாப்பை கருதி நமது சூர்யா நினைவு அறக்கட்டளையின் வாகனத்தை மணப்பாறை அரசு மருத்துவமனையிடம் 100 நாட்கள் வழங்கி வந்தோம். கொரோனா உறுதி செய்தவர்களுக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் அவர்களுக்கு தேவையான அத்தியாயசிய பொருட்களை அவர்களின் வீட்டின் வாசலை கொண்டு சேர்த்தோம். இந்த நேரத்தில் 105 நாட்கள் தொடர்ந்து தினமும் 250 நபர்களுக்கு வீதம் 52500 நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.