Posted on 13 Aug, 2024
போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை
போதை வேண்டாம் என்ற விழிப்புணர்வை மக்களிடையே பரப்புவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. நியூஸ் 7 உடன் இணைந்து மிகப்பெரிய வேலையை வையம்பட்டியில் சூர்யா நினைவு அறக்கட்டளை நடத்தியது. இதில் ஆர்டிஓ, தாசில்தார் அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொண்டு போதையினால் என்னென்ன பாதிப்பு உருவாகும் அதனால் நம் நாட்டில் உள்ள இளைஞர்களின் வாழ்க்கை எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும் துண்டு காகித விளம்பர பத்திரிக்கைகளை வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதில் சூர்யா நினைவு அறக்கட்டளை மிகவும் முக்கிய பங்கு ஆற்றுகிறது. இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு கிராமங்களில் உள்ள வளரும் குழந்தைகள் மேல்நிலை பயிலும் (9,10) உள்ள குழந்தைகளிடமும் இந்த விழிப்புணர்வை உருவாக்கி வருகிறோம்.